என்ன கொடுமை சார் இது..மாயமான கியர் ராடு ஷாக் கொடுக்கும் அரசுப்பேருந்து!
அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்த ஊரடங்குஅமல்படுத்தபட்டதால்பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசுப் பேருந்து சேவைகளும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசு பேருந்தில் கியர் இல்லாமல் ராடு கம்பியினை பயன்படுத்தும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் -குமுளி வழியாக இயக்கப்படும் அரசுப்பேருந்தில் கியர் ராடு பழுதடைந்துள்ளது.
இதையடுத்து, பணிமனை ஊழியர்கள் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தியுள்ளார்.
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, இந்த இரும்பு கம்பியைக் கொண்டுதான் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்களை வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.