ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

people election vote assembly overseas
By Jon Mar 18, 2021 12:49 PM GMT
Report

வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காகவோ, படிப்பதற்காகவோ அல்லது வேறெனும் காரணங்களுக்காக சென்றிருக்கும் இந்திய குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில், இந்தியாவில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.mvsp.in அல்லது தேர்தல் ஆணையத்தின் www.eci.nic.in என்ற இணையதளத்தில் படிவம் 6ஏ என்பதைப் பதிவிறக்கம் செய்துவிட்டு, அதில் கேட்கப்படும் தேவையான ஆவணங்களையோ அல்லது ஆதாரங்களையோ இணைத்து தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படிவம் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும். இந்தப் படிவத்தை அஞ்சல் துறை மூலம் அனுப்புவதாக இருந்தால் அனைத்து ஆவணங்களின் இரண்டு பிரதிகளை சுய சான்று அளிப்புடன் வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதே சமயம், அலுவலரிடம் நேராக விண்ணப்பத்தை அளிக்க நேர்ந்தால் சரிபார்ப்புக்காக பாஸ்போர்ட்டை சமர்ப்பித்துக் கொள்ளலாம்.