பசியால் 4 வினாடிகளுக்கு ஒரு முறை ஒருவர் மரணம் - வெளியான திடுக்கிடும் தகவல்

Death
By Thahir Sep 21, 2022 04:38 PM GMT
Report

பசியால் 4 வினாடிகளுக்கு ஒரு முறை ஒருவர் மரணம் அடைவதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பட்டினியால் பலியாகும் மனிதர்கள் 

சர்வதேச அளவில் பசி என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனை தீர்க்க உலக தலைவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் தன்னாரவ் தொண்டு அமைப்பினர் பசியால் ஏற்படும் இறப்புகளை தடுக்க ஐ.நாவில் ஆலோசனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசியால் ஒவ்வொரு 4 வினாடிகளுக்கு ஒருமுறை ஒருவர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 238 உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் 77வது ஐநா பொதுச் சபையில் கூடியுள்ள தலைவர்களிடம் உலகளாவிய பசியை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்துள்ளனர்.

பசியால் 4 வினாடிகளுக்கு ஒரு முறை ஒருவர் மரணம் - வெளியான திடுக்கிடும் தகவல் | Starvation Kills One Every 4 Seconds

75 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 345 மில்லியன் மக்கள் இப்போது கடுமையான பசியை அனுபவித்து வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சோமாலியாவில் பஞ்சம் மீண்டும் நெருங்கிவிட்டது.

உலகம் முழுவதும் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.