செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி... உலக நாடுகள் ஆர்வம்..
கொரோனா தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்த பல நாடுகள் திணறி வரும் நிலையில், சில உலகநாடுகள் செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வரும் காட்டி வருகின்றது.
முதல் அலை, 2வது அலை என கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை படாதபாடு படுத்தி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தற்போதைய தீர்வு என்ற நிலையில் அனைத்து நாடுகளும் தங்களது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கி வருகிறது.
ஆனால் வதந்தி காரணமாக மக்களில் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

ரஷ்யா தற்போது செல்லப் பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள கால்நடை கிளினிக்குகள் இந்த பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா கார்னிவக் கோவ் (Carnivak-Cov) என்ற தடுப்பூசியை செல்லப் பிராணிகளுக்கான உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.