கச்சத்தீவு விவகாரம்: எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுதான் - அண்ணாமலை!

Tamil nadu Coimbatore BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Jiyath Apr 02, 2024 09:28 AM GMT
Report

சட்ட ரீதியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவு விவகாரம் 

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் தற்போது கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்: எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுதான் - அண்ணாமலை! | Started Work To Save Kachchathivu Says Annamalai

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "கச்சத்தீவு வேண்டும் என்பதே எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. இதற்கான ஒவ்வொரு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதற்கான முக்கிய நோக்கம், அப்போதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

திமுக ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தால் தானே குறை கூற முடியும் - கலாய்த்த எடப்பாடி பழனிசாமி!

திமுக ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தால் தானே குறை கூற முடியும் - கலாய்த்த எடப்பாடி பழனிசாமி!

என்ன நியாயம்? 

இலங்கை அரசிடம் பேசி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவையே திரும்பக் கேட்போமா என்பது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலோசித்து வந்தோம். கச்சத்தீவு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.

கச்சத்தீவு விவகாரம்: எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுதான் - அண்ணாமலை! | Started Work To Save Kachchathivu Says Annamalai

அறிவியல் பூர்வமாக, சட்ட ரீதியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் உங்களிடம் தெரிவித்து வருகிறேன். கச்சத்தீவை மீட்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதவர்கள், தற்போது என் மீது பாய்வது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.