தொடங்கியது இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
அதிபர் தேர்தல் தொடங்கியது
மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.இந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுரா குமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவின் முடிவுகள் 3 மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.