டான்ஸ் ஆடும் நட்சத்திரங்கள் - அதிசய நிகழ்வு: அரிய புகைப்படம்

dance NASA Star
By Anupriyamkumaresan Oct 11, 2021 03:30 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விஞ்ஞானம்
Report

பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த நடனத்தை பதிவு செய்திருக்கிறது நாசா. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி இரண்டு கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சியைப் படம் பிடித்துள்ளது.

பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த நடனத்தை பதிவு செய்திருக்கிறது நாசா. செங்குத்தாக ஒரு கேலக்ஸியும் சமநிலையில் ஒரு கேலக்ஸியின் ஒன்றோரு ஒன்று கைநீட்டி நடனமாடுவது போல இந்தப் புகைப்படம் பதிவாகியிருக்கிறது.

டான்ஸ் ஆடும் நட்சத்திரங்கள் - அதிசய நிகழ்வு: அரிய புகைப்படம் | Stars Dance Photo Viral Shared By Nasa

இரண்டு விண்மீன் திரள்களும் சுழல்ரக (Spiral Galaxies) கேலக்ஸிக்களாக வகைப்படுத்தப்பட்டாலும் பூமியிலிருந்து பார்க்கும்போது அவை நீள்வட்டங்களாகத் தோன்றுகின்றன.இந்த கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது புதிய கேலக்ஸியை உருவாக்கும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இது அவ்வளவு எளிதில் நிகழும் நடனம் அல்ல. பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வது. ஆக,நமது வாழ்நாளில் அல்லது நமது தலைமுறைகளின் வாழ்நாளில் காணக்கூடிய ஒரே நட்சத்திரங்களின் நடனமாக இது இருக்கும் என நாசா கூறுகிறது.

முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன. இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம்.

விண்வெளி குறித்து ஒவ்வொரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அடிக்கடி அங்குள்ள நிலையை படம் பிடித்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.

பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.