மசால் தோசைய அடிச்சுக்கமுடியுமாப்பா - பாராட்டி தள்ளிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்!

Bengaluru Viral Photos
By Sumathi Nov 06, 2022 07:01 AM GMT
Report

பெங்களூர் உணவகத்தை, ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர் பாராட்டியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர் 

பெங்களூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் கலந்துக்கொள்ள ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர் செவ் சீகல் வருகை தந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள வித்யார்தி பவனில் மசாலா தோசையும், ஃபில்டர் காபியும் சாப்பிட்டுள்ளார்.

மசால் தோசைய அடிச்சுக்கமுடியுமாப்பா - பாராட்டி தள்ளிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்! | Starbucks Co Founder Praises Masal Dosa

அதனைத் தொடர்ந்து, அவர் நண்பரே உங்கஆளது ஃபேமஸான உணவு, காபி மற்றும் அன்பான உபசரிப்பை பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். அற்புதமான இந்த அனுபவத்தை என்னோடு சியாட்டலுக்கு கொண்டு செல்ல உள்ளேன்.

மசால் தோசைதான்..

நன்றி என அங்கிருக்கும் நினைவு பலகையில் எழுதி கையெழுத்திட்டார். மேலும், பாராட்டி 3 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த உணவகம் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. இதனை கண்ட நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.