தொகுதி பங்கீட்டை சுமுகமாக்குவாரா முதல்வர்?? திமுக முன்னிருக்கும் சவால்கள் ??

M K Stalin Tamil nadu DMK
By Karthick Oct 16, 2023 05:30 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் தொகுதி பங்கீடு எவ்வாறு அமையும் என்ற கேள்விகள் தற்போதே எழுந்துள்ளது.

தமிழக நாடாளுமன்ற தேர்தல் களம்

வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் மும்முனை போட்டியை உருவாக்கும் என்று தான் தற்போதைய சூழல் காட்டுகிறது. திமுக - அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளின் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், திமுகவின் இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிவாகிவிட்டது.

ஆனால், இதில் தொகுதி பங்கீடு எவ்வாறு அமையும் என்பது தான் தற்போதைய மிக பெரிய கேள்வியாகும். எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணியை தாண்டி தங்கள் கட்சியை முன்னிறுத்தவர் அனைவரும் முயற்சிப்பர். அதில் தான் தற்போது திமுகவிற்கு சிக்கல் உள்ளது.

staratergy-of-dmk-in-upcoming-central-election

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக 24 தொகுதிகளை வென்ற நிலையில், கூட்டணியில் நின்ற காங்கிரஸ் 8 இடங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும், கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் தலா 1 இடங்களையும் வென்றிருந்தன.

இம்முறையும் திமுக கணிசமான இடங்களை வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா கூட்டணியில் பங்கு பெற்றுள்ள திமுக தேசிய அளவில் முக்கியத்துவம் பெற கணிசமான இடங்களை வென்றிட முயலும்.

ஆனால் அதற்கு கூட்டணி கணக்கு சரிவர அமைய வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும் (தமிழகத்தில் 9 + புதுச்சேரியில் 1), விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட) தலா 2 தொகுதிகளும், ,மதிமுக, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டன.

ஆனால் இம்முறை கூட்டணி கணக்கில் சற்று சிக்கல் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஏனெனில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் இட பங்கீடு சுமுகமாக நடந்து முடிந்தாலும், இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சிக்கலாக தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

staratergy-of-dmk-in-upcoming-central-election

அதே நேரத்தில் இம்முறை விசிக கட்சி 3 இடங்களை( சென்ற முறை சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர்) ஆகிய தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டுவதாக தெரிகிறது. கமல் தானே இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டுவதோடு, கட்சிக்கு இன்னும் ஒரு சில இடங்களையும் கேட்கலாம்.

கடந்த முறை 10 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் இம்முறை அதே அளவில் தான் தொகுதிகளை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூட்டணியில் 9 இடங்களை கேட்டு பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

staratergy-of-dmk-in-upcoming-central-election

இந்த இடங்களில் தான் சற்று கூட்டணி விவகாரத்தில் திமுக நெருக்கடியை சந்திக்க நேரும் என கூறப்படுகிறது. அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில், தொடர்ந்து முஸ்லீம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பாஜக எதிர்ப்பின் காரணமாக அதிமுக பக்கம் செல்லாத சில கட்சிகள் தற்போது திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு திருப்திக்கரமாக அமையாமல் போனால் அதிமுக பக்கம் செல்லக்கூடும். இந்த நெருக்கடியும் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்கமுடியாது.