இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு..!
Srilanka
Star sapphire cluster
By Petchi Avudaiappan
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு ரத்தினபுரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக வணிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் இந்திய மதிப்பில் ரூ.745 கோடி இருக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்தக் கல்லின் எடை 510 கிலோ ஆகும்.
இவ்வளவு பெரிய கல்லை இதற்கு நான் முன்பு பார்த்ததில்லை. இது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இருக்கும் என புகழ்பெற்ற ரத்தினவியலாளர் டாக்டர் காமினி ஜோஸ்சா தெரிவித்துள்ளார்.