ஸ்டேன் சுவாமிக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது : முதல்வர் ஸ்டாலின்

stalin stanswamy
By Irumporai Jul 05, 2021 04:34 PM GMT
Report

மனித உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

ஆழ்ந்த இரங்கல். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.