‘‘ஸ்டேன் சாமி மறைவு- சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை” - விசிக கட்சி தலைவர் திருமாவளவன்

Thirumavalavan Stan Swamy
By Irumporai Jul 05, 2021 02:37 PM GMT
Report

திருச்சியை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சாமி, கடந்த 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கர் பரிஷத் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தலேஜா சிறையில் பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஸ்டேன் சாமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மனித உரிமைகள் ஆணையமும், ஐநா முக்கிய பிரமுகரும் அறிவுறுத்தி இருந்த நிலையில் அவர் சிறையிலேயே காலமானார்.

சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரஙகலை தெரிவித்து வரும் நிலையில் வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில்

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான்சாமி உயிரிழந்தார்

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும்.

பாஜக அரசின் இந்த 'சட்டம்சார் பயங்கரவாதத்தை' வன்மையாகக் கண்டிக்கிறோம்" எனக் கூறினார்