ஒன்றரை நிமிடத்தை வைத்து அரசியல்.. அம்பேத்கர் அரசியல்வாதியா? தமிழிசை தாக்கு!
200 க்கு 200 என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி, தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் அவரது உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்லாட்சி என்றாலே வாஜ்பாய் தான் என்று பிரதமர் மோடி பதிவு செய்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து சென்றவர்.
வாஜ்பாய் ஆட்சியும், பிரதமர் மோடியின் ஆட்சியும் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் சபதமாக இன்று எடுத்துக் கொண்டோம் என்றார். அமித் ஷா பேச்சு சர்ச்சையானது குறித்து பதிலளிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பேசினார். அதில் ஒன்றரை நிமிடத்தை எடுத்து வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். இதில் நேரு செய்த தவறுகளை மறைக்க பார்க்கின்றனர்.
அதற்கு பதிலாக பாஜக மீதும், அமித் ஷா மீதும் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கூட இரண்டே இரண்டு தலித் வேட்பாளர்களை தவிர எஞ்சியவர்கள் அனைவரும் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளனர்.
அம்பேத்கர்
அண்ணன் திருமாவளவனை பார்த்து மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஏனெனில் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் எதிர்த்தது ஓர் அரசியல் என்று கூறுகிறார். அப்படியெனில் ஓர் அரசியல்வாதியாக தான் அம்பேத்கரை பார்க்கிறாரா?
என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் எல்லாம் அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுத்து கொண்டு திரிகிறார்கள். ஆனால் நாங்கள் அதை கிரீடமாகவே வைத்திருக்கிறோம் எனக் கூறினார்.
வேங்கைவயல் விஷயத்தில் இன்னும் பதில் சொல்லப்படவில்லை. இதை திமுக கூட்டணி கட்சியே ஒப்புக் கொண்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்களின் கூட்டணியில் திருமாவளவன்,
கம்யூனிஸ்ட்கள், வேல்முருகன் உள்ளே இருப்பார்களா? என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் 200, 200 என்று அண்ணன் ஸ்டாலின் சொல்லி கொண்டிருப்பது நிச்சயம் கனவாக தான் போகும் என்று