இதற்கு பெயர்தான் ஸ்டாலினிசம் : பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

M K Stalin DMK
By Irumporai Mar 31, 2023 10:09 AM GMT
Report

தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அன்பில் மகேஷ்  

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டப்பேரவையில் பேசினார்.

இதற்கு பெயர்தான் ஸ்டாலினிசம் : பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு | Stalinism Minister Anbil Mahes Speech Parliament

அப்போது பேசிய அவர், ஆடும் மாட்டை ஆடிக் கறந்து, பாடும் மாட்டை பாடிக் கறந்து, அரசின் திட்டம் எனும் பாலினை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம் என தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினிசம்   

 மேலும், தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார்; ஐநா சபையில் கல்வி மாற்றம் என்ற மாநாட்டில் இல்லம் தேடிக்கல்வி தொடர்பாக பேசப்பட்டுள்ளது என்றும் இதுதான் ஸ்டாலினிசம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.