மாநில அரசுகள் ஒன்றிணைய வேண்டும் - 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

Tamil Nadu BJP Union Government
By mohanelango Jun 08, 2021 12:40 PM GMT
Report

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஆளும் 12 மாநில முதல்வர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சரும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரையும் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், “இக்காலகட்டத்தில் நம்முடைய கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.


GalleryGallery