ஒன்றிணைவோம் வா - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

DMK Stalin Ondruinaivom Vaa
By mohanelango May 14, 2021 05:24 AM GMT
Report

திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிணைவோம் வா திட்டத்தை மீண்டும் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், “தமிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும்; தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது!”

#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது!

மேலும் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.