தேமுதிக தலைவர் விஜய்காந்த் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

Stalin Vijaykanth
By mohanelango May 19, 2021 12:07 PM GMT
Report

தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து, “வழக்கமான மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக விஜய்காந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜய்காந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விஜய்காந்த் உடல்நிலை பற்றி விசாரித்து விரைந்து உடல்நலம் பெற வேண்டும் பல தலைவர்களும் தெரிவித்து வந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜய்காந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன்.” என்றுள்ளார்.