கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - செல்பி எடுத்து மக்கள் உற்சாகம்!

dmk stalin ammk aiadmk
By Jon Mar 23, 2021 07:11 PM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - செல்பி எடுத்து மக்கள் உற்சாகம்! | Stalin Walks Scorching Sun Vote People Selfies

இந்நிலையில் கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் கொளுத்தும் வெயிலில் சாலையில் நடந்து சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

சாலையில் நடந்து செல்லும் போது ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்தும், ஆரவாரம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.