முதல்வர் ஸ்டாலின், தோனி,ரஜினி,விஜய் ஆகியோரது டிவிட்டர் ப்ளூ டிக் அதிரடி நீக்கம்
முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்களின் ப்ளூ டிக்கை அதிரடியாக நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.
ப்ளூ டிக்கை நீக்கும் ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். அந்த வகையில், நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகளை ட்விட்டர் நிறுவனம் வழங்கி வருகின்றன.
இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக்கை நீக்கிய வருகிறது ட்விட்டர் நிறுவனம்.
அந்த வகையில் அண்மையில் நடிகர் ஜெயம்ரவி, நடிகை த்ரிஷா உள்ளிட்டவர்களின் ப்ளூ டிக்கை நீக்கியது ட்விட்டர் நிறுவனம். இது பேசும் பொருளான நிலையில் மேலும், பல அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
தலைவர்கள், பிரபலங்களின் ட்விட்டர் பக்க ப்ளூ டிக் நீக்கம்
உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்களின் ப்ளூ டிக்கை நீக்கியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.
அதன்படி, போப் பிரான்ஸிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களின் ப்ளூ நீக் நீக்கப்பட்டுள்ளது இதேபோல், விளையாட்டு வீரர்கள் தோனி, கோலி உள்ளிட்டவர்களின் ட்விட்டர் ப்ளூ நீக் நீக்கப்பட்டுள்ளது.
சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.