ஸ்டாலினுக்கு மோனிகா பாட்டுக்கு வைப் செய்யதான் நேரம் - ஜெயக்குமார்

M K Stalin Tamil nadu DMK D. Jayakumar
By Sumathi Aug 15, 2025 03:57 PM GMT
Report

ஸ்டாலினுக்கு மோனிகா பாட்டுக்கு வைப் செய்ய நேரம் இருக்கிறதா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் அலட்சியம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

jayakumar - mk stalin

“ஒருபுறம் கூலி பாடம் பார்த்து கொண்டே மறுபுறம் தூய்மை பணியாளர்களை அத்துமீறி அப்புறப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்!ஸ்டாலின் என்ற மனிதனின் மனதில்,எங்கள் மக்கள் மீது அப்படி என்ன வெறுப்பு? தூய்மை பணியாளர்களை அடித்து துரத்திய ஸ்டாலின் அவர்களே...

தூய்மைப் பணியாளர்கள் கைது; அவர்கள் தேச விரோதிகளா? விஜய் கண்டனம்!

தூய்மைப் பணியாளர்கள் கைது; அவர்கள் தேச விரோதிகளா? விஜய் கண்டனம்!

ஜெயக்குமார் கேள்வி

உங்களை விரட்டுகின்ற நேரமும் காலமும் வெகுதூரம் இல்லை! 13 நாட்களாக போராடியவர்களை ஒரு 10 நிமிடம் பார்க்க நேரம் இல்லை! ஆனால் 3 மணி நேரம் கூலி படத்திற்கும்,மோனிகா பாட்டுக்கும் வைப் செய்ய நேரம் இருக்கிறதா?

நீங்கள் தற்போது அடித்து சிறையில் தள்ளப்பட்ட மக்கள் தான் உங்களை அதிகாரத்தில் அமர வைத்தவர்கள்! இனி குப்பையை போல உள்ள உங்கள் பாசிச அரசை அவர்களே அகற்றி எறிவார்கள்!

நம்புங்கள்! நாம் நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.