ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - அதிமுக புகார்

election stalin aiadmk udayanidhi
By Jon Apr 05, 2021 01:03 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4-ம் தேதி உடன் நிறைவடைந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது கொளத்தூர், திருச்சி மேற்கு, காட்பாடி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யக் வேண்டும் என்றும் அதிமுக அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார்.

அப்போது பேசிய அவர், ”கொளத்தூர், திருவண்ணாமைலை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, காட்பாடி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு திமுக பணப்பட்டுவாடா செய்துள்ளது. எனவே இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விருப்ப வெறுப்பின்றி செயல்பட வேண்டும்” என்று கூறினார்.