ஸ்டாலின் ட்விட்டர் பதிவு...நீக்கிய ராணுவம் - கொதித்தெழுந்த கனிமொழி..!

Twitter M K Stalin Smt M. K. Kanimozhi
By Thahir Aug 03, 2023 06:25 AM GMT
Report

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரீ-ட்வீட்  செய்த பதிவை இந்திய ராணுவம் நீக்கியுள்ளதால் அதற்கான விளக்கம் கேட்டு திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

பதவி உயர்வு பெற்ற செவிலியர்  

கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய ராணுவ செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற பதவிக்கு உயர்ந்துள்ளார். அவரை வாழ்த்தி இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவிற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் வாழ்த்து

தமிழக  முதல்வர் முக ஸ்டாலினும் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டு இருந்தார்.  இந்திய ராணுவத்தின் பதிவை ரீ-ட்வீட் செய்த முக ஸ்டாலின் தனது பதிவில்,

பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் என்னடும்! மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்! என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், முக ஸ்டாலின் ரீ-ட்வீட் செய்த பதிவை இந்திய ராணுவம் நீக்கியுள்ளது.

stalin twitter post army remove kanimozhi question

காரணம் கேட்கும் கனிமொழி 

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரீ-ட்வீட் செய்த பதிவை ராணுவம் நீக்கிய காரணத்தை தற்போது திமுகவின் எம்.பி கனிமொழி வினவியுள்ளார். கனிமொழியின் கேள்விக்கு பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

stalin twitter post army remove kanimozhi question

சிலர் கனிமொழியின் கேள்வியை ஆமோதிக்கும் நிலையில், ராணுவம் முக ஸ்டாலினின் பதிவை நீக்காமல், தங்களது பதிவை தானே நீக்கியுள்ளது என்று எதிர்க்கருத்தும் பதிவிட்டு வருகின்றனர்.