வாக்களிக்கும் முன் தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

memorial dmk stalin Karunanidhi
By Jon Apr 06, 2021 02:18 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் முன், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தந்தையின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.