ஸ்டாலின் சுற்றுப்பயணம் திடீர் ரத்து.. காரணம் என்ன?
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் 6வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேலும் அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
வருகிற 12, 13ம் தேதிகளில் 6ம் கட்ட சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னிட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் 6வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இன்று திமுக போட்டியிடும் தொகுதியில் வெளியிடப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட இருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.