சிங்கப்பூரின் தந்தைக்கு மன்னார்குடியில் சிலை: ஸ்டாலின் அறிவிப்பு - என்ன காரணம்?
சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ-விற்கு மன்னார்குடியில் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர்
அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கு உள்ள தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்பொழுது அங்கு உள்ள தமிழ் மக்களுக்காக பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், "திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன்.
கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை, தமிழ்நாட்டில் இருப்பதை போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவு படுத்திட முடியாது" என்று கூறினார்.
அறிவிப்பு
இதனை தொடர்ந்து அவர், "சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் நலன் காக்க தமிழக அரசு பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், " சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீ குவான் யூ-வால் தான் இங்கு தமிழ் மக்கள் உயர்வு பெற்றனர். தமிழும் உயர்வடைந்தது.
அதனால் அவருக்கு தமிழகத்தில் சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
தொடர்ந்து, இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இந்த கிராமங்களில் இருந்து வந்த மக்களின் வளர்ச்சிக்காக அவர் உதவியதால், அவருக்கு தமிழகத்தில் உள்ள மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகமும் அமைக்க முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.