''ஸ்டாலின் நல்லதே நினைப்பது இல்லை'': முதல்வர் பழனிச்சாமி
ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லைஅதனால் அவருக்கு நல்லது நடக்காது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளநிலையில், முதல்வர் , மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய், உண்மையை பேசுவதில்லை . அரசு கட்சி மற்றும் நமது கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி விமர்சனம் வைப்பது இதுதான் அவரது வாடிக்கை.
ஏனென்றால் மக்களுக்கு செய்தால்தான் சொல்லுவதற்கு, எதையும் செய்யவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நல்லது நினைப்பது இல்லை; அதனால் அவருக்கு நல்லது நடப்பது இல்லை என தெரிவித்தார்.