அந்த ஒரே ஒரு கேள்விக்கு கண்ணீர் விட்டு அழுத மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. இதனையடுத்து, தமிழக தேர்தல் களத்தில் பிரச்சாரம் நடத்த இன்றுடன் முடிகிறது. எப்படியாவது அதிமுக ஆட்சியை ஒழித்தே ஆக வேண்டும் என்ற தன் முனைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஸ்டாலினுடன் விவாதம் செய்ய ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. ஸ்டாலின் செய்வாரா என்ற வாசகத்தை முன்வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் ஸ்டாலினுடன் உரையாடினார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள், என்ன மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள் என்று பல கேள்விகளை இளைஞர்கள் ஸ்டாலிடம் கேட்டனர்.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது, நிகழ்ச்சி முடிவில் பெண் ஒருவர், “உங்கள் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்ன” என்ற கேள்வியை கேட்டார். அந்த கேள்விக்கு ஸ்டாலின் உருக்கமானார். தந்தை கருணாநிதியின் மறைவையும், அவரை அடக்கம் செய்ய இடம் தர மறுத்ததையும், அப்போது தனக்கு வந்த அந்த சோதனை வேறு யாருக்கும் வரக் கூடாது, நீதிமன்றம் வாயிலாக நீதி கிடைத்து தந்தையின் கடைசி ஆசையான அண்ணாவிற்கு அருகில் அடக்கம் செய்து நிறைவேற்றியதே மறக்க முடியாத தருணம் என்றார்.

இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே, குரல் தழுதழுத்து, நிகழ்ச்சியிலேயே கண் கலங்கி அழுது விட்டார். அப்போது ஸ்டாலின் அழுததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சோகமடைந்துவிட்டனர். தந்தைக்கு இட மறுத்தது குறித்து ஸ்டாலின் பிரச்சாரங்களில் கூறியிருக்கிறார்.
இதற்கு நேற்று முதல்வர் எடப்பாடி விளக்கமளித்தார். எம்ஜிஆரின் மனைவி ஜானகியையும் காமராஜரையும் அடக்கம் செய்ய கருணாநிதி இடம் தர மறுத்ததால், தானும் அவருக்கு மறுத்ததாகக் கூறியுள்ளார்.