பிரதமரின் அறிவிப்பை வரவேற்கும் தமிழக முதல்வர்

vaccination modi dmk stalin
By Irumporai Jun 07, 2021 05:29 PM GMT
Report

பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றும் போது, மாநிலங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்தார் இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் மக்களிடம் உரையாற்றும் போது, மாநிலங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் என்றும், மீதமுள்ள 25% தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து தமிழக முதலமைச்சர் அவரதுட்விட்டர் பக்கத்தில், மாநிலங்களுக்கு இலவசமாக மத்திய அரசே நாட்டில் தயாரிக்கப்படும் 75 சதவீதம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

மேலும், தடுப்பூசியை குறித்து மத்திய அரசின் முந்தைய நிலையை மாற்றிக்கொண்டதற்கும் பிரதமருக்கு பாராட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று தடுப்பூசி பதிவு மற்றும் சான்று தரும் நடைமுறையையும் மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.