ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் முதல்வர் பதவியேற்பு விழா

post cm stalin takeover governor palace
By Praveen May 02, 2021 11:12 PM GMT
Report

 தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது,

திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றிக்கு வழி வகுத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி. தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர்.

எந்த நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றுவோம். அண்ணா, கலைஞர் அவர்கள் பயிற்றுவித்த வழிநின்று மக்கள் கடமையாற்றுவோம்.

நாளை மறுநாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு சட்டமன்ற தலைவர் தேர்ந்தடுக்கப்படுவார். கொரோனா தொற்று காரணமாக பதவி ஏற்பு விழா எளிமையாக ஆளுநர் அலுவலகத்திலேயே நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.