திடீரென போன் அடித்த ஸ்டாலின்..பதறிப்போன வேட்பாளர்கள்
திமுக அவர்கள் வேட்பாளர்களுக்கு திடீரென போன் செய்ததால் வேட்பாளர்கள் பதறிப்போகி உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசியல்வாதிகள்,திரை பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை தங்களது ஜனநாயக கடைமையை செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் தேனாம்பேட்டை தொகுதியில் தனது குடும்பத்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்களித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் மக்கள் அமைதியாக ஜனநாயக் கடமையை ஆற்றிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இதன் முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும் அது உறுதி. ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது” என்று பேசினார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு திடீரென போன் செய்துள்ளார். அந்த போன் உரையாடலில் வேட்பாளர்களிடம் அவர் பேசியதாவது.
"எவ்வளவு ஓட்டு வாங்குவீங்க ,லீடிங் எவ்வளவு வரும் , வெற்றிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" என்று ஒவ்வொருவரிடமும் கூற அவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.