வாணியம்பாடியின் வீதியில் இறங்கி வாக்கு சேகரித்த ஸ்டாலின்.. தொண்டர்கள் உற்சாகம்.!
வாணியம்பாடி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை ஆதரித்து முக்கிய சாலைகளில் நடந்து சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக்காக நேற்று வந்த மு.க. ஸ்டாலின் ஆம்பூர் அருகே உள்ள தனியார் காலனி தொழிற்சாலை கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தார்.
காலை தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஜோலார்பேட்டை பகுதியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார்.

பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி நோக்கி வந்த அவர் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீம் ஆதரித்து வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.சாலை உழவர் சந்தை, ஜின்னா சாலை பகுதியில் நடந்து சென்று கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அங்கு குவிந்திருந்த மக்கள் பூமாலை அணிவித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முன்னறிவிப்பு இல்லாமல் வாணியம்பாடி நகர் வீதிகளில் நடந்து வந்த ஸ்டாலினை பார்த்து மக்கள் உற்சாகமானார்கள்.