தமிழக மாணவர்களை பழி வாங்கும் மத்திய அரசு - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

M K Stalin Tamil nadu Government Of India Education
By Karthikraja Feb 09, 2025 09:30 AM GMT
Report

 தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வேறு மாநிலத்திற்கு வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PM Shri திட்டம்

மத்திய அரசின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவதுவதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். 

mk stalin

இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழக அரசு இதை எதிர்த்து வருவதாகவும், இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக ரூ.2,152 கோடியை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய மறுத்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறைக்கு எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர். 

இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது இல்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.