துரோகங்களை மட்டுமே தொடர்ந்து செய்யும் பாஜக - மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

M K Stalin Tamil nadu BJP Narendra Modi
By Karthikraja Jan 23, 2026 07:42 AM GMT
Report

தேர்தல் சீசனில் மட்டும் அடிக்கடி தமிழ்நாடு வருவதாக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு வரும் மோடி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை வலுப்படுத்துவதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 

துரோகங்களை மட்டுமே தொடர்ந்து செய்யும் பாஜக - மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | Stalin Slam Modi Tamilnadu Visit Only For Election

இந்த கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த வருகை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள மோடி, " ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது" என பதிவிட்டுள்ளார். 

மோடியின் தமிழ்நாடு வருகை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? 

துரோகங்களை மட்டுமே தொடர்ந்து செய்யும் பாஜக - மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | Stalin Slam Modi Tamilnadu Visit Only For Election

#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்? 

பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?

இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?

ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்" என தெரிவித்துள்ளார்.