முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் (வீடியோ)
முதலமைச்சர் ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல்
கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு சென்று முதலமைச்சர் இன்று தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, எத்தனை முனை போட்டி நிலவினாலும் திமுக கூட்டணிக்கு தான் சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
VIDEO | TN polls: CM MK Stalin files nomination at Kolathur constituency for April 23 polls.
— Press Trust of India (@PTI_News) March 30, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/2T4KR4QT8K
சீமான் வேட்பு மனுத்தாக்கல்
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான சீமான் அவருடைய தாய் மற்றும் மனைவியுடன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்ற சீமான் மனு தாக்கல் செய்யும் முன் தாயாரிடம் ஆசி பெற்றார், தொடர்ந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழி பெயரில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.