நான் ஏன் ஸ்டாலினுக்கு எதிரா போட்டியிடல தெரியுமா? விளக்கம் கொடுத்த சீமான்
வரும் சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், மு.க.ஸ்டாலினை ஏன் எதிர்த்து போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தொகுதி தொட்ர்பான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ம நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவேன் என கடந்த முறை சவால் விட்டிருந்தார்.
தற்போது, ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீமான் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.