முதல்வர் உள்ளூர் மளிகைக் கடைக்கு சென்று நிலைமையை அறிய வேண்டும்- மு. க ஸ்டாலின்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மளிகைப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான நாளிதழ்களில் வெளியான செய்திகளை மு. க ஸ்டாலின் காட்டி சுட்டி காட்டியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் உள்ளூர் மளிகைக் கடைக்கு சென்று நிலைமையை நேரில் அறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது..,
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்!
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்... அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்! #PriceRise #Inflation
— M.K.Stalin (@mkstalin) October 15, 2026