ஒரேயொரு ஸ்வீட் பாக்ஸ் தான்; மோடியின் பிம்பம் க்ளோஸ் - ராகுல் காந்தியை புகழ்ந்த ஸ்டாலின்!
ராகுல் வழங்கிய இனிப்பு எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முப்பெரும் விழா
கோவையில் திமுகவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கடந்த முறை கோவையில் நான் பங்கேற்ற கூட்டம் இந்திய அளவில் டிரெண்டானது. ஏனென்றால் 8 முறை தமிழகம் வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை ஒரு ஸ்வீட்ச் பாக்ஸால் சகோதரர் ராகுல் காந்தி க்ளோஸ் செய்தார்.
ஸ்டாலின் புகழாரம்
ராகுலின் அன்பை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ராகுல் வழங்கிய இனிப்பு எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை பொய்யாக்கியது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தேர்தல் முடிவுகளை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 40க்கு 40வெற்றி என முழங்கியபோது அதனை பலரும் யோசித்தனர்.
ஆனால் அந்த நம்பிக்கை எனக்கு இருந்தது. அதற்கான அடித்தளம் கொள்கைக்காக இங்கே கூடியிருக்கும் கூட்டம் தான். அதோடு மேடையில் உள்ள தலைவர்கள் நம்பிக்கைக்கு ஆதாரம்.
இதனால் தான் 40க்கு 40 தொகுதிகளில் வென்றோம்.திமுகவின் உடன்பிறப்புகள் இந்தியா கூட்டணி கட்சிகளின் தோழர்கள் இருக்கும் திசை நோக்கி நான் வணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.