முக ஸ்டாலினுக்கு சத்யராஜ் கொடுத்த அற்புத பரிசு
தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் சத்யராஜ் அற்புதமான பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற வெற்றிபெற்று தமிழக முதல்வராக வருகிற மே 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவரது இந்த வெற்றிக்கு திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.
இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சத்யராஜ் பெரியார் படத்தை அன்பளிப்பாக கொடுத்தார். இந்த பரிசு மிகவும் அற்பமானது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் சத்யராஜுடன் பெரியார் படம் உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த திரையுலகினர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சத்யராஜும் தனது வாழ்த்தை நேரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.