திமுக கூட்டணியில் விரிசல்? திருமாவளவன் வேதனை -முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்ப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திமுக கூட்டணி
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக நாம் வலிமை பெறப்போகும் போதுதான், அதிகார வர்க்கத்தை நாம் செயல்பட வைக்க முடியும். இன்றைக்கு 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அவ்வளவு எளிதாக நம்மால் ஒரு இடத்தில் கொடி ஏற்ற முடியவில்லை.
வேறு எந்த இடத்திலும் கொடி ஏற்றினால் அதனை அதிகாரிகள் கேட்கமாட்டார்கள். பேனர் வைத்தால் உடனடியாக அகற்றுவார்கள்.அதனால்தான் நாம் இன்னும் அரசியல் ரீதியாக வலிமை பெற வேண்டிய தேவை உள்ளது என்று பேசியிருந்தார்.
ஸ்டாலின் பதிலடி
இதற்கு அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்"திருமாவளவன் நொந்து நூலாகி விட்டார்" என்றும், "வேங்கைவயல், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக-வை எதிர்த்து அவரால் கேள்வி கேட்க முடியவில்லை என்று கருத்து தெரித்த நிலையில் அதற்கு திருமாவளவன் பதில் அளித்து இருந்தார்.
உங்களின் ஆசையில்தான் மண் விழும்; எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது!#தமிழ்_வாழ்க #FairDelimitationForTN pic.twitter.com/8Nq2npGtoI
— M.K.Stalin (@mkstalin) March 2, 2025
இந்த நிலையில் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்ப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
