கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் வெற்றிபெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார் முக ஸ்டாலின்

stalin karunanidhi anna certificate respect
By Praveen May 02, 2021 08:55 PM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார்.

இதனால், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.