தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க திமுக அரசு பாடுபடும் - ஸ்டாலின் உறுதி

Tamil Stalin Official Language
By mohanelango Jun 06, 2021 10:56 AM GMT
Report

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கருணாநிதியின் முயற்சியால், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான அரசாணை கடந்த 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

செம்மொழி தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும்.

நமது அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட உறுதியுடன் பாடுபடும்” என்று தெரிவித்து உள்ளார்.