’உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்!’ வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
Corona
Stalin
Diaspora
Fund
By mohanelango
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நிதியுதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற உடன் பல வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகள் தமிழக அரசு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தன.
அதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பி.தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
உலகத் தமிழர்களே!
— M.K.Stalin (@mkstalin) May 13, 2021
உயிர்காக்க நிதி வழங்குவீர்! https://t.co/7P7Gcz5yxV