விஜய் குறித்த கேள்விக்கு முதலமைச்சரின் பதில்

M K Stalin
By Fathima Apr 12, 2026 09:10 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் நான்காம் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளார், நேற்று தஞ்சாவூர் வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் திலகர் திடலில் 8 தொகுதி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். 

தொடர்ந்து புதுக்கோட்டையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார், அங்கே நடைப்பயணம் செய்தும் மக்களை நேரடியாக சந்தித்தும் திமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

விஜய் குறித்த கேள்விக்கு முதலமைச்சரின் பதில் | Stalin Reply To Vijay Question

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை, நாங்கள் இங்கே வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம், நடிகர்களின் பின்னால் செல்லும் கூட்டத்தை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள் என தெரிவித்தார்.

பரமக்குடியில் பிரசாரம்

இன்று பரமக்குடியில் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

இன்று காலையில் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதன்பின் செய்தியாளர்களை சந்திக்கையில், ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது தொடர்பான கேள்விக்கு, ஜனநாயகன் விவகாரம் பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக-வுக்கும் தவெக-வுக்கு இடையே தான் போட்டி என விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு No Comments என பதிலளித்தார்.

விஜய் குறித்த கேள்விக்கு முதலமைச்சரின் பதில் | Stalin Reply To Vijay Question