திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் முக ஸ்டாலின்

today election dmk stalin
By Jon Mar 13, 2021 03:44 AM GMT
Report

திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறா் திமுக தலைவர் ஸ்டாலின். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட மு.க.ஸ்டாலினிடம், ‘தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘நாளை (அதாவது இன்று) மாலைக்குள் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.