சூடுபிடிக்கும் தேர்தல் களம்..நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரான முக ஸ்டாலின்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு தயார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரபட்ட வழக்கிற்கான உச்சநீதிமன்ற தடையை விலக்கிக் கொண்டால், முதலமைச்சருடன் எந்தவொரு இடத்திற்கும் விவாதத்திற்கு வர தாம் தயார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கேள்வி-பதில் வடிவிலான நேருக்கு நேர் கருத்தரங்கில், பங்கேற்ற மு.க.ஸ்டாலின், எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து திமுக ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.