தனியாரில் ஸ்டாலின்.. அரசு மருத்துவமனையில் முதல்வர் - குவியும் வாழ்த்துக்கள்.!!
தனியார் மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நிலையில் முதல்வர் பழனிசாமி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த இந்திய அரசு இரண்டு மருந்துகளை கண்டுபிடித்தது. தற்போது இந்த தடுப்பூசி தமிழகத்தில் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. முன் களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வருகின்றனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கொரானா தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அரசு மருத்துவமனையில் தான் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார்.
இதனால் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படும் என்ற நோக்கத்திலேயே இவர்கள் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அரசு மருத்துவமனைகளை நம்பாமல் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டிருந்தார்.
அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் தனியார் மருத்துவமனையில் ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையை அணுகியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் அவர்களும் அரசு மருத்துவமனையில் செலுத்தப்படும் தடுப்பூசியை போட்டுக் கொண்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.