எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜி - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

M K Stalin V. Senthil Balaji DMK
By Karthikraja Feb 28, 2026 11:12 AM GMT
Report

செந்தில் பாலாஜி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக மேற்கு மண்டல முகவர்கள் மாநாடு

கோவை மாவட்டம் நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல முகவர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. 

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜி - முதல்வர் ஸ்டாலின் புகழாரம் | Stalin Praise Senthil Balaji Nightmare For Enemies

இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பாசக்கார மேற்கு மண்டலத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன்! கோவை மண்ணில் காலையில் நான் கால் வைத்ததும் “ஏனுங்க தலைவரே சவுக்கியமா” என்று கேட்டு, பாசத்தில் நிறைத்துவிட்டீர்கள்.

அதிலும், கல்லூரி மாணவிகள், குடும்பங்கள் என்று திரண்டு வந்து நீங்கள் கொடுத்த வரவேற்பில் “நாம்தான் ஜெயிப்போம்” என்று இருநூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது.

இந்த கோவை மண் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றில் முக்கியமான ஊர், இந்த ஊர். பெரியாரை அண்ணா சந்தித்தது இந்த கோவை மண்டலத்தில்தான்! தலைவர் கலைஞரை எம்.ஜி.ஆர். சந்தித்ததும் இங்குதான்!

இந்தி திணிப்பிற்கு எதிரான போரில் பொள்ளாச்சி நிகழ்வை யாரும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த கோவை மண்ணில், கழகத்தின் வேர்களாக, கழகத்திற்கும் மக்களுக்குமான உறவுப்பாலமாக கழக வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும் வாக்குச்சாவடிக் குழுவினரான உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிம்ம சொப்பனமாக செந்தில் பாலாஜி

மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தையே மாபெரும் மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்கள்! இவரது இந்த ஆற்றல்தான் எதிரிகள் பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. 

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜி - முதல்வர் ஸ்டாலின் புகழாரம் | Stalin Praise Senthil Balaji Nightmare For Enemies

செந்தில் பாலாஜிக்கு அவர்கள் கொடுத்த குடைச்சல்களை வைத்தே இவர் எந்த அளவிற்கு எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதை உணரலாம். செந்தில் பாலாஜி அவர்கள் அனுபவித்த தொல்லைகள் மாதிரி வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

மிரட்டலுக்கு பயந்து முதுகு வளைந்து கும்பிடு போடுபவர்களுக்கு இடையே இவர் எந்த மிரட்டலுக்கும் பயந்து அடிபணியவில்லை! நெருக்கடிகளுக்கு தலைவணங்காமல், நெஞ்சுரத்தோடு எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கிறார்.

செந்தில் பாலாஜி அவர்கள் கழகத்திற்கும், தலைமைக்கும் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்தளவிற்கு சிறப்பாக பணியாற்றி வரும் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்!

இந்த "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பயிற்சி மாநாடுகளை, பிப்ரவரி 11-ஆம் தேதி திருவிடந்தையில் தொடங்கினோம்! அடுத்து, திருப்பத்தூர், மதுரையை தொடர்ந்து கோவையில் நிறைவு செய்கிறோம். சுமார் ஏழு இலட்சம் வாக்குச்சாவடி குழுவினரை இப்படி சந்தித்திருக்கிறேன்.

இங்கு நான் வந்திருப்பது, உங்களை உற்சாகப்படுத்த மட்டுமல்ல. உங்களைப் பார்த்து, நானும் உற்சாகம் அடைவதற்கும், புத்துணர்வு பெறுவதற்கும்தான் வந்திருக்கிறேன். உங்கள் முகங்களைப் பார்க்கும்போது உங்களின் மகிழ்ச்சியும், எனர்ஜியும் எனக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகிறது! உங்கள் தன்னம்பிக்கையைப் பார்த்து, என்னுடைய தன்னம்பிக்கை லெவலும் அதிகமாகிறது!

இந்த மேற்கு மண்டலத்தில் 14 மாவட்டக் கழகங்கள் 39 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இது எல்லாவற்றிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற செய்திதான் ரிசல்ட் அன்றைக்கு தலைப்பு செய்தியாக வர வேண்டும்!

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த மேற்கு மண்டலத்தை பொறுத்தவரைக்கும் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை! அதை சரிசெய்து மாபெரும் வெற்றியை பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இங்கு மேடையில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. எதிரில் கூடியிருக்கும் உங்களுக்கும் இருக்கிறது! செய்துவிடுவீர்களா? உறுதியாக செய்துவிடுவீர்களா? 

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜி - முதல்வர் ஸ்டாலின் புகழாரம் | Stalin Praise Senthil Balaji Nightmare For Enemies

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த மண்டலத்தில் எப்படி பெரிய வெற்றியை பெற்றோமோ அதேபோல் பெரிய வெற்றியை சட்டமன்றத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவிற்கு மேற்கு மண்டலத்திற்கு திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். காலையில் கோவைக்கு வந்ததிலிருந்து, என்னுடைய நினைவில் இருக்கும் வரைக்கும் சொல்கிறேன்.

பல்வேறு இடர்களை கடந்து அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். கோவையில் I.T. பார்க், செம்மொழிப் பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாடு, விசைத்தறிக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி மற்றும் சிறு தொழில்களுக்கு மின் கட்டண குறைப்பு, விசைத்தறியை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு , சாலை இல்லாத மலைக் கோயில்களுக்கு சாலை வசதிகள்.

இதுமட்டுமல்லாமல், கோவையில் தந்தை பெரியார் பெயரில் மாபெரும் நூலகம் அமைய இருக்கிறது. உலக தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய இருக்கிறது. வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற இருக்கிறது. தோழி விடுதிகள் கட்டப்பட இருக்கிறது.

சூலூர் பகுதியில் செமி கண்டக்டர் தொழில் பூங்கா வரப் போகிறது. கோவை மாவட்டத்திற்கு 75 புதிய E-Bus வர போகிறது. மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இன்னும் ஏராளமான திட்டங்கள் மேற்கு மண்டலத்திற்கு வர இருக்கிறது.

எனவே, தொழில் முனைவோர் அதிகமாக இருக்கும் இந்த மேற்கு மண்டலம் வளர்ச்சியைத்தான் விரும்பும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இங்கு வந்திருக்கும் உங்களின் ஒவ்வொரு பூத்திற்கும் எவ்வளவு டார்கெட்? 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே, சுலபமாக, 2 கோடியே 60 இலட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் பெற்றுவிடலாம்.

இந்தத் தேர்தலில், நாம் 2 கோடியே 50 இலட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் பெற்றே ஆக வேண்டும்! இதை பெற்றுக் காட்டுவது உங்கள் பொறுப்பு! உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த உதவிகளை செய்து தருவது என்னுடைய பொறுப்பு!

“2 கோடியே 50 இலட்சமா?” என்று பெரிய நம்பரை யோசித்து யாரும் ஷாக் ஆகாதீர்கள். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு 40-50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு செட் செய்திருக்கும் டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே போதும்! நான் சொன்ன நம்பர் வந்துவிடும்!

200 தொகுதி நிச்சயம்! 200 தொகுதிகளுக்கு கூடுதலாகவும் வெற்றி பெறுவதுதான் நம்முடைய இலட்சியம்! அடுத்த 2 மாதம்! உங்களுக்கும் சரி - எனக்கும் சரி ‘No Rest’! ஒவ்வொரு வாக்காளரையும் நீங்கள் எல்லோரும் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும்.

இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இப்படி புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், ஒருவரின் வீட்டு படியேறி சென்று, அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பணிவாக வாக்கு கேட்கும் பிரசாரத்திற்கு எதுவுமே ஈடாகாது" என பேசியுள்ளார்.