தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்! முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin
By Fathima Feb 03, 2026 03:34 AM GMT
Report

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார் என முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57வது நினைவு நாளான இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அண்ணாவின் உருவச்சிலை, புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்! முதலமைச்சர் ஸ்டாலின் | Stalin Paying Tribute To Annas Death Anniversary

முதல்வரின் பதிவு

 “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!

அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.

மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான்!

ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.