இப்போ இருக்கும் சூழ்நிலையில் நீட் தேர்வு அவசியமா? - ஆவேசமான மு.க.ஸ்டாலின்

exam stalin tweet neet
By Irumporai Apr 15, 2021 09:59 AM GMT
Report

கொரோனா அதிகரிக்கும் நிலையில் நீட் தேர்வு தேவையா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும், தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரணமும் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் அவசியம்தானா? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.