நான் உங்கள் ரசிகை.. தமிழக முதல்வரை சந்திக்க ஆசைப்பட்ட சிறுமி - நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்!

M K Stalin DMK Mumbai
By Vinothini Sep 02, 2023 05:02 AM GMT
Report

பள்ளி மாணவி ஒருவரின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்ட டுவீட் வைரலாகி வருகிறது.

சிறுமி பதிவிட்ட வீடியோ

மும்பையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், மும்பைக்கு வருகை தர இருந்த தமிழக முகாதல்வரை சந்திக்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டு கோரிக்கை வைத்தார். அதில், " நான் உங்களது பெரிய ரசிகை" , மும்பை வரும் உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

stalin-met-mumbai-student

அந்த வீடியோ பதிவு சமூக அவளைத்தளத்தில் வைரலாகி வந்தது. பிரனுஷ்காவின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவரை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

மு.க.ஸ்டாலின் டுவீட்

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்து டுவிட்டர் பக்கத்தில், "மும்பையில்‌, என்னை சந்திக்க விரும்பிய அறிவார்ந்த இரக்கப்‌ பண்பு கொண்ட பிரணுஷ்கா என்ற மாணவியின்‌ விருப்பத்தை நான்‌ நிறைவேற்றினேன்‌. மணிப்பூரில்‌ நடந்த வன்முறை இவரைப்‌ போன்ற ஒரு பள்ளி மாணவியைக்கூட எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப்‌ பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

அதிகாரத்தில்‌ இருப்பவர்கள்‌ அமைதி மற்றும்‌ நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உழைக்க வேண்டும்‌ என்பதற்கு இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்‌. ஐஏஎஸ்‌ அதிகாரியாக வேண்டும்‌ என்ற பிரணுஷ்காவின்‌ கனவு நனவாக வாழ்த்துகிறேன்‌" என்று பதிவிட்டிருந்தார்.